அரசு பள்ளியில் ஆண்டு விழாமாணவ, மாணவியர் அசத்தல்


அரசு பள்ளியில் ஆண்டு விழாமாணவ, மாணவியர் அசத்தல்


எலச்சிபாளையம்:எலச்சிப்பாளையம் ஒன்றியம், மஞ்சநாயக்கனுார் பஞ்., தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வசந்தி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அனைவருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில், இயற்கை பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், விவசாயத்தை உயர்த்துவது, நா பிறழ் பயிற்சி என, பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. உதவி ஆசிரியர் சிவக்குமார், பள்ளி மேலாண்குழு மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள், பெற்றோர், பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement