ஆற்றில் செத்துமிதக்கும் மீன்கள்


ஆற்றில் செத்துமிதக்கும் மீன்கள்


பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைந்து வருகிறது. சில நாட்களாக குடிநீருக்கு மட்டும் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், வெயில் அதிகரித்து வருவதால், கடந்த, இரண்டு நாட்களாக ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இவ்வாறு செத்து மிதக்கும் மீன்கள், பெரியார் நகர் ஆற்றோரம் படித்துறையில், நேற்று கரை ஒதுங்கியது. இதனால் அப்
பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.

Advertisement