இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது
இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், செவ்வந்திப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 34; அரசு கட்டட பொறியாளர். இவர் கடந்த, 18ல், எருமப்பட்டி இந்தியன் வங்கியில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயை எடுத்து டூவீலர் டிக்கியில் வைத்துக்கொண்டு, யூனியன் அலுவலகம் நோக்கி சென்றார். பின், அலுவலகம் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற சரவணன், இரண்டு மணி நேரம் கழித்து வந்தார். அப்போது, வண்டி டிக்கியில் வைத்திருந்த, 2.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்படி, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பேர், சரவணன் டூவீலரை பின் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், பெரம்பலுாரை சேர்ந்த செந்தில், 40, திருவெறும்பூரை சேர்ந்த ராமு, 29, என்பதும், வங்கியில் பணம் எடுக்கும்போது நோட்டமிட்டு, பின் தொடர்ந்து வந்து யூனியன் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலரில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து