முட்டை விலை 5 காசு உயர்வு
முட்டை விலை 5 காசு உயர்வு
நாமக்கல்:நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 475 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 15 காசு உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 500, ஐதராபாத், 425, விஜயவாடா, 450, பர்வாலா, 442, மும்பை, 490, மைசூரு, 485, பெங்களூரு, 485, கோல்கட்டா, 510, டில்லி, 460 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 77 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 96 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும், எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து