நேற்றைய போக்சோ
மாணவியை கடத்திய சிறுவன்
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்., 18ல் மாயமானார். போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது, முதுகுளத்துார் அருகே ஆதனக்குறிச்சியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி போக்சோ சட்டத்தில் கைது செய்து, மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்.
சிறுமியிடம் அத்துமீறியவர் கைது
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமி, தாயுடன் வசிக்கிறார். சிறுமியின் தாய்க்கு, மதுரையைச் சேர்ந்த சிவக்குமார், 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் இவர்களுடன் வசித்தார். சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, சிவக்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார். தட்டிக்கேட்ட தாயையும் தாக்கி மிரட்டினார். திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார், சிவக்குமாரை கைது செய்தனர்.
ஓவிய ஆசிரியருக்கு 'காப்பு'
சேலம்: சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவியரிடம், அப்பள்ளி ஓவிய ஆசிரியர், 'பேட் டச்' செய்து பேசுவதாக, பெற்றோர் கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் பள்ளியில் போலீசார் விசாரித்ததில், சேலம், மணக்காட்டைச் சேர்ந்த சீனிவாசன், 58, அவரது வகுப்பின் போது, தவறான எண்ணத்துடன் மாணவியரை தொட்டு பேசியது தெரிந்தது. அவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
17 வயது சிறுவன் கைது
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பாப்பாங்குளம் பகுதி, 17 வயது சிறுவன், அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும், 13 வயது சிறுமியுடன் பழகினார். கடந்த 18ம் தேதி, சிறுமியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சிறுமியின் தாய், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இதையறிந்த சிறுவன், சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியை காணாததால், பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுவன் வீட்டில் சிறுமி தங்கியது தெரியவந்தது. சிறுவனை அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து, கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து