பர்னிச்சர் ஆலையில் தீ

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மீனாட்சி நகரை சேர்ந்தவர் தனசேகர், 41; ஓசூரில் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இதில் பணியாற்றும் ஆறு தொழிலாளர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட, தொழிற்சாலையை மூடிச் சென்றனர்.

மதியம், 3:00 மணிக்கு மின்கசிவால் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர், இரு வாகனங்களில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.

Advertisement