விமான பயணியிடம் தோட்டா பறிமுதல்
திருச்சி:திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்ற விமான பயணியிடம் தோட்டா ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
வட அமெரிக்க நாடான கனடா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்ட் வில்சன், அவரது மனைவி பிரிட்டானி சீலியுடன் பிப்.17ம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் விமானத்தில் திருச்சி வந்த அவர் நேற்று அதிகாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை செல்ல இருந்தார்.
அவரது பையில் வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பதை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்த அவர்கள் அது வேட்டை துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா என்பதை அறிந்தனர். அவர் உரிமம் வைத்திருந்த போதிலும் விமானத்தில் ஆபத்தான வெடி பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தோட்டாவை பறிமுதல் செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
Advertisement
Advertisement