போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்

21


ரோம்: போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் தெரிவித்தது.


வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். 2022ல் முழங்கால் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர். 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், சில நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து, வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் குணமடைய கத்தோலிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement