பள்ளி, கல்லுாரி செய்திகள்
தேசிய அறிவியல் கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை, இந்திய பால்வள குழுமம் தமிழ்நாடு பிரிவு சார்பில் மருத்துவ அறிவியல் சார்ந்த தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கோபி மணிவண்ணன் வரவேற்றார். அரவிந்த் கண் மருத்துவமனை ஆராய்ச்சி நிபுணர் செந்தில்குமாரி, புனே டெங்கு வைரஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி அழகரசு, ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் சுரேஷ் கோவிந்தன் உள்ளிட்டோர் பேசினர். உயிரியல் துறை, பாராமெடிக்கல் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஹரிவிஷ்ணு, அபிராமி, மதன்மோகன், ராஜ்குமார் பாரதி ஒருங்கிணைத்தனர்.ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
தேசிய என்.எஸ்.எஸ். முகாம்
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., சார்பில் தேசிய என்.எஸ்.எஸ். முகாம் துவக்க விழா நடந்தது. பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். முதல்வர் சந்திரன் வரவேற்றார். இந்திய கலாசாரம், தேசிய ஒருமைப்பாடு, இளைஞர் நலம் உள்ளிட்ட தலைப்புகளில் 7 நாட்கள் நடக்கும் முகாமில் பல்வேறு மாநிலங்களின் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா, ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, சதீஷ், வெள்ளியப்பன் பேசினர். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'