கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!

காரைக்குடி: காரைக்குடியில் கல்லூரி விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாட்ச்மேன் அழகப்பன், 56, கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி வாட்ச்மேன் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. பின்னர், வாட்ச்மேன் அழகப்பனை போலீசார் கைது செய்தனர்.










மேலும்
-
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்! கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள்
-
காலவரையற்ற வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு
-
தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்
-
டில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்