வழிப்பறி வாலிபர்கள் கைது

வாடிப்பட்டி : அரியூர் பாண்டியன் மகன் கஜேந்திரன் 20, பரவை தனியார் மில் ஊழியர். நேற்று முன்தினம் டூவீலரில் வந்த இவரிடம் சமயநல்லுார் மெயின் ரோட்டில் சமுதாயக்கூடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி மற்றும் ரூ.500ஐ இருவர் வழிப்பறி செய்தனர்.



சமயநல்லுார் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் அய்யூர் கோகுலகிருஷ்ணன் 22, தனிச்சியம் ரமேஷ் கண்ணனை 22, கைது செய்தனர். இதில் கோகுல கிருஷ்ணன் மீது 2 வழிப்பறி வழக்கும், ரமேஷ் கண்ணன் மீது போக்சோ வழக்கும் உள்ளது.

Advertisement