ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்! கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் கூறி உள்ளது. சுந்தர்நகர் பகுதியில் கியார்கி அருகே 7 கி,.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாகவும் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். சிலர் வீடுகளை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் அடைந்தனர்.
நில அதிர்வுகள் பதிவானாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை, பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement