காரும், பஸ்சும் மோதல்; குழந்தை பரிதாப பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், திருத்தால கும்பிடி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரதும் மனைவி ரஹீனா. இத்தம்பதியரின் ஒன்றரை வயது மகன் ஹைபான்.

இவர்கள் நேற்று காலை கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து, உறவினர்களை காரில் அழைத்து வந்து கொண்டிருந்த போது, திருத்தால என்ற இடத்தில் எதிரே வந்த தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில், ஹைபான் சம்பவ இடத்தில் உயிரிழந்தது. விபத்தில் காயமடைந்த கார் பயணியரான ஏழு பேரை, அப்பகுதி மக்கள் மீட்டு, பட்டாம்பி மற்றும் குன்னம்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இதுகுறித்து, திருத்தால போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement