மரக்கன்றுகளால் பசுமையை ஆக்கும் கலாம் அறக்கட்டளை

மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நடுவதன் மூலம் பசுமையை அதிகரித்து அதில் மாணவர்களையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சமூக ஆர்வலர்கள்.நத்தம் சுற்றுவட்டாரத்தில் ஹச்.ஐ.எல்.எஜுகேஷன் டிரஸ்ட் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள், பனை விதைகள், இல்லங்கள் தோறும் மூலிகைச் செடிகள் நடவு செய்கின்றன.
அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் பை தீமைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். மாணவர்கள் அறிவை வளர்க்கும் விதமாக அறிவியல் கண்காட்சி வைத்து அதில் திறமையாக அறிவியல் படைப்புகள் செய்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறார்கள். இயற்கையை காக்க, மரம் நடுதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பணிகள், உதவிகள், இளைஞர்கள், பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் பயிற்சிகள்,
வழிகாட்டும் நிகழ்ச்சிகள் என தங்களின் சேவை சிறகை விரியச்செய்தது. நத்தம் கோபால்பட்டி,ரெட்டியார்சத்திரம், மதுரை, அய்யலுார் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்படும் விழிப்புணர்வு மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க முடியும் என்ற நம் பிக்கையுடன் சமூக பணியாற்று கின்றனர்.
மனநிறைவாக உள்ளது
மருதைகலாம், நிர்வாகி, அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, சாணார்பட்டி: சமூகப் பணிக்கென தனி நேரம் ஒதுக்கி விழிப்புணர்வு, சமுதாய மேம்பாட்டிற் கான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிறைவு ஏற்படுகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் செயற்கை, வேதி இடமே இல்லை என்ற சூழலை உருவாக்கி உள்ளோம்.
இயற்கை வழி வேளாண்மையை ஊக்கு விப்பதன் மூலம் நிலம், நீர், காற்று மாசுபடுதலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இயன்ற அளவு பசுமையான மரக் கன்று நடவு, பராமரிப்பு போன்ற வற்றை மேற்கொண்டு வருவதன் மூலம் மழை நீர், தரமான உணவு உற்பத்தி போன்றவற்றிற்குஅடித்தளம் அமைக்க முடியும்.
ஊக்குவிக்கிறோம்
சதாசிவம், தலைவர் சூரியா பவுண்டேஷன், நத்தம் : பசுமை சூழலை விரிவுபடுத்துதல், துாய்மை பசுமை கிராமம் உருவாக்கும் களப் பணியை ஊக்குவிப்பது.
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நிகழ்வுகள் மாணவர்க ளுக்கு இலவச மாலை நேர வகுப்பு, கலாமின் கனவை நிறைவேற்ற வீடு தோறும் கலாம் கனவு நுாலகம் ஏற்படுத்தும் முயற்சி, பாலிதீன் ஒழிப்பு குறித்த விழிப் புணர்வு, விவசாய தின விழா நடத்தி விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல் வேறு விழிப்புணர்வுகளை செய்கிறோம்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?