பொது மருத்துவ முகாம்

வடமதுரை, : வடமதுரை கலைமகள் உதவிபெறும் துவக்கப் பள்ளியில் ஸ்ரீஆண்டாள் திருப்பாவைக்குழு, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

பள்ளி இயக்குனர் மணிகண்டன் தலைமை வகித்தார். திருப்பாவை குழு செயலாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.

தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரபிரபா, ராக்ஸ் மருத்துவமனை நிர்வாக அலுவலர் கோட்டைச்சாமி பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., முத்துக்குமார் நன்றி கூறினார்.

Advertisement