வேகத்தடையால் தொடருது விபத்து
சோழவந்தான் : சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம்- இரும்பாடி இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2023ல் துவங்கியது.
இப்பால பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகிறது. பாலத்தை இணைக்கும் பகுதியில் குருவித்துறை ரோடு பால சந்திப்பில் 2, வளைவில் 1 என வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் கறுப்பு, வெள்ளை வண்ணம் பூசப்படவில்லை. இங்கு வேகத்தடை இருப்பது கண்ணுக்கு தெரியாததால் அருகில் வந்ததும் திடீரென பிரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். புதிதாக வருவோர் அதிகளவில் விழுந்து காயமடைந்துள்ளனர். இப்பகுதி பாலத்தில் மின் விளக்குகள் இல்லை.
இரவு பகல் நேரங்களில் பாலம், 'பாராக' மாறி விடுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை பலகை, வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசவும், பாலத்தில் மின் விளக்குகளை பொருத்தி கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?