பங்காரு அடிகளார் பிறந்தநாள் குருஜோதி விழா துவக்கம்

சிங்கபெருமாள்கோவில்,:ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழாவையொட்டி, சிறப்பு வேள்வி பூஜை, குருஜோதி ஏற்றுதல் விழா, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜை மற்றும் குருஜோதி ஏற்றும் விழா, சிங்கபெருமாள்கோவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், நேற்று நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் வேலு, செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார், டாக்டர் பராசக்தி மற்றும் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன் பின், சிங்கபெருமாள்கோவிலில் குருஜோதி துவங்கி, மாவட்டம் முழுதும் கிராமங்களுக்குச் சென்று, 28ம் தேதி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்றடைகிறது.
விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு
-
கிராமத்திற்கு பஸ் வசதியின்றி நடந்து செல்லும் அவலநிலை கண்டுகொள்ளாத அமைச்சர்
-
பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது
-
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு
-
குடிநீர் இணைப்பிற்கு பங்களிப்புத் தொகை கேட்பதால்... அதிருப்தி; 'ஜல்ஜீவன்' திட்ட நிதி வசூலில் திணறும் உள்ளாட்சிகள்
-
ராகுகால பூஜை