மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு கட்டடத்தில் எக்ஸ்ரே மையம் இல்லாததால் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு தனியாக 5 தளங்கள் கொண்ட கட்டடம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் எக்ஸ்ரே எடுப்பதற்காக பச்சிளம் குழந்தைகளுடன் பழைய வெளி நோயாளிகள் பிரிவில் அமைந்துள்ள எக்ஸ்ரே மையத்திற்கு செல்லவேண்டியுள்ளது. எக்ஸ்ரே மையத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எக்ஸ்ரே எடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தில் ஒரு எக்ஸ்ரே மையம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்