காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், காசநோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி சார்பில், காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி வாயில் முன்பு துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை, சீனியர் எஸ்.பி., கலைவாணன், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், டீன் ராமச்சந்திரபட், சமூக மருத்துவவியல் துறை தலைவர் கவிதா வாசுதேவன், காசநோய் திட்ட அதிகாரி வெங்கடேஷ், மாநில ஆலோகர் சூரியகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் துவங்கிய 5 கிலோ மீட்டர் மாரத்தான், கடற்கரை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரி மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக மருத்துவதுறை டாக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்