எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளத்தில் கழிவுநீர் தீர்த்தம் பாதுகாக்கப்படுமா

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட மாமாங்க தெப்பக்குளம் கழிவு நீரால் நிரம்பி உள்ளதால், எமனேஸ்வரம் எம தீர்த்தம் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் கும்பகோணத்திற்கு இணையாக மாமாங்க தெப்பக்குளம் இருக்கிறது.
இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடந்தது. இக்குளம் எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறும் எமனேஸ்வரமுடையவர் கோயில் எதிரில் உள்ளது. இந்த தீர்த்தம் எம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் புனித நீராடி சென்றதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். தொடர்ந்து குளத்தின் தன்மை குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதின் பேரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க., ஆட்சியில் கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு துார்வாரி படித்துறைகள் கட்டப்பட்டன. மேலும் கம்பி வேலி அமைத்து பராமரிக்கப்பட்டது.
தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது மீண்டும் கழிவுநீர் தேங்கி அசுத்தமாகி இருக்கிறது. ஆகவே நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், தீர்த்தத்தின் புனிதத்தை மீட்டெடுக்கவும், மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறையினர் குளத்தின் தன்மையை ஆராய்ந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தினர்.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்