'அறிவிப்பு முதல்வராக உள்ளார் ரங்கசாமி' முன்னாள் முதல்வர்

நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் தொகுதி காங்., செயல்வீரர்கள் கூட்டம் மடுகரையில் நடந்தது.

காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் முத்துக்குமாரசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதில்லை. பிறந்த பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவது, காஸ் மானியம், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்கள் செயல்படவில்லை.

அறிவிப்பு முதல்வராக தான் ரங்கசாமி உள்ளார். செயல்படுத்தும் முதல்வராக இல்லை. புதுச்சேரியில் 400 பார்களில் இருந்து தற்போது 950 பார்களாக அதிகரித்துள்ளது.

கஞ்சா புழக்கம் அதிகளிவில் உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் தொடர்ந்து நடக்கிறது.

புதுச்சேரியில் அரசு பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திட்டத்தை அவசரமாக அமல்படுத்தியால் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பயந்து மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது' என்றார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இளைஞர் காங்., பொதுச் செயலாளர் சத்தயநாராயணன்,வட்டார காங்., தலைவர் அம்மைநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement