கெங்கராம்பாளையம் டோல்கேட் இன்று திறப்பு

கண்டமங்கலம் : கெங்கராம்பாளையம் தானியங்கி டோல்கேட் திறப்பு விழா இன்று நடக்கிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கெங்கராம்பாளையம் டோல்கேட் கடந்த ஜன. 3ம் தேதி திறக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
ஆனால் பணிகள் நிறைவுபெறாதது, தென்னக ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளிக்காதது போன்ற காரணங்களால் டோல்கேட் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பணிகள் முடிந்து கெங்கராம்பாளையம் தானியங்கி டோல்கேட் திறப்பு விழா இன்று பிப்., 24ம் தேதி நடக்கிறது.
டோல் கேட் இன்று திறக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.
டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள எட்டு வழிகளில் வாகனங்களை அனுமதித்து பரிசோதனை ஓட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஊழியர்கள் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தடுப்பு கட்டைகள் விளக்கிக் கொள்ளப்படுகிறதா என்று சோதித்துப் பார்த்தனர்.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்