திறப்புவிழா நடத்தியும் பயன்பாட்டிற்கு வராத கூடலுார் பஸ் ஸ்டாண்ட் - ரூ.2.30 கோடி நிதி வீணாகும் அபாயம்

கூடலுார: கூடலுார் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காணப்பட்டு 10 நாட்களாகியும், பஸ்கள் உள்ளே சென்று பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் ரூ.2.30 கோடி நிதி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பஸ் ஸ்டாண்ட் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. நிழற்குடை, பயணிகள் காத்திருப்பு அறை, 10 கடைகள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, பிப்.15ல் திறப்பு விழா கண்டது. திறப்பு விழா நாளில் பெயரளவில் ஓரிரு பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து, சென்றன. தொடர்ந்து பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் பயணிகள் நிற்க இடவசதி இன்றி வெயிலில் சிரமம் அடைவது தொடர்கிறது.
நகராட்சி அலுவலர்களும், போலீசாரும் இணைந்து சிறிது நாட்கள் தொடர்ந்து அனைத்து பஸ்களையும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயனிகளை ஏற்றி இறக்க கட்டாயப்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பயன்படுத்தாமல் இருந்தால் குடிமகன்களின் கூடாரமாகவும், தனியார் வாகனங்கள் நிறுத்தும் பகுதியாகவும் மாறிவிடும். உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பயணிகள் அனைவரையும் பஸ் ஸ்டாண்டிற்குள் நின்று பஸ் ஏற அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நெடுஞ்சாலையில் நெரிசல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கட்டப்பட்ட கடைகள், கழிப்பறைகளை டெண்டர் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. டெண்டர் விடப்பட்டவுடன் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அனைத்து பஸ்களும் உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்