ஆலோசனை கூட்டம்

தேனி : மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு, ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா முன்னிலை வகித்தார்.

நிறுவனத் தலைவர் பொன்.ரவி சிறப்பு ஆற்றினார். பிப்.28ல் பொம்மையக்கவுண்டன்பட்டி அலுவலகத்தில் தர்மம் காக்கும் தட்சனை பெறும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மும்மொழி கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பொது மக்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement