ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

கடலாடி : திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட பல ஊராட்சிகளில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ரூ. 3 லட்சம் முதல் 7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பின்றி அப்படியே விட்டு உள்ளதால், ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகள் தஞ்சம் அடையும் பகுதியாக மாறிவிடுகிறது. அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாகவும் மாறுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக துப்புரவு பணிகளை செய்யவும், நிழற்குடையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement