கொடிவேரியில் பரிசல் சவாரிக்கு 'லைப் ஜாக்கெட்' இனி கட்டாயம்
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். தடுப்பணையின் மேல் பகுதியில் பரிசல் பயணமும் செல்லலாம். இதற்காக, 43 பரிசல்கள் சுழற்சி முறையில் தினமும் இயக்கப்படுகிறது.
பரிசல் பயணத்தின்போது சுற்றுலா பயணிகள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய நீர்வள ஆதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பிளக்ஸ் பேனரும், பரிசல் துறை அருகே
கட்டப்பட்டுள்ளது.
இதனால் பரிசல் ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளை லைப் ஜாக்கெட் கட்டாயம் அணிய வலியுறுத்தி அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குவிந்தனர். தடுப்பணை வழியாக, 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் தண்ணீர் அருவியாக கொட்டாததால், பவானி ஆற்றில் குட்டையாக தேங்கிய தண்ணீரில் பலர் குளித்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement