சூதாடிய ஏழு பேர் கைது

தேனி : கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தம்பம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தில், பணம் வைத்து சூதாடிய கம்பம் முருகன் 52, கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த எபின் 35, எருமேலி லைஜூ 38, ராமக்கல்மேடு ஜெய் 29, கம்பம் முகமதுரபீக் 54, கூடலுார் சிவக்குமார் 52, சென்னை ஸ்ரீநகர் காலனி இளங்கோ 62, ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் ரூ.32 ஆயிரத்து 500ஐ கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement