பெங்., மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும் அமைச்சர் ராமலிங்கரெட்டி திட்டவட்டம்

பெங்களூரு: ''எங்களூக்கு விருப்பம் உள்ளதோ, இல்லையோ நடப்பாண்டு மே மாதம், பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தியே ஆக வேண்டும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தாமதமாகிறது.

நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ, தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். இல்லை என்றால் உச்சநீதிமன்றம் உத்தரவிடும்.

கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவை ஆய்வு செய்யும் பொறுப்பு, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையிலான இணை கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. கமிட்டி தன் அறிக்கையை, சபாநாயகர் காதரிடம் நாளை (இன்று) தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மசோதா அமலுக்கு வந்தால், பெங்களூரில் 10 முனிசிபல் கார்ப்பரேஷன்கள் அமைக்க வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு மக்களுக்கு சிறப்பான சேவைகள் செய்ய, ஒரு முனிசிபல் போதாது. ஒரு கமிஷனரால் மொத்த நகரையும் மேற்பார்வையிட முடியாது. சரியான சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மழைநீர் சாக்கடைகளை நிர்வகிக்க முடியாது. இரண்டு அல்லது மூன்று கார்ப்பரேஷன்கள் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement