சிவகுமார் நாளை டில்லி பயணம் 

பெங்களூரு,: மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்திக்க, துணை முதல்வர் சிவகுமார் நாளை டில்லி செல்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த 18, 19 ம் தேதிகளில், மாநில நீர்வள அமைச்சர்கள் மாநாடு நடந்தது. கர்நாடகா சார்பில் நீர்பாசனத்துறையை தன் வசம் வைத்து உள்ள, துணை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டார்.

மாநாட்டில், மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம், மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்தார். டில்லியில் வந்து தன்னை சந்திக்கும்படி, சி.ஆர்.பாட்டீல் கூறி இருந்தார். அதன்படி நாளை, டில்லியில் வைத்து, சி.ஆர்.பாட்டீலை, சிவகுமார் சந்திக்கிறார். மேகதாது உட்பட மாநிலத்தின் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்கிறார். பின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயை சந்திக்கிறார்.

கர்நாடகாவில் புதிதாக கட்டப்பட உள்ள 100 காங்கிரஸ் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேதி நிர்ணயிப்பது குறித்து பேசுகிறார். மாநில அரசியல் நிலவரம் குறித்தும், இந்த நேரத்தில் ராகுல், கார்கே காதுகளில் போடுகிறார். குடும்பத்தினருடன் துபாய் சென்று உள்ள சிவகுமார் இன்று பெங்களூரு திரும்புகிறார்.

Advertisement