ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!

புதுடில்லி: இந்தியாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஆஸ்திரேலிய முதியவரின் விருப்பம் நிறைவேறியது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர் டொனால்ட் சாம்ஸ். இவருக்கு வயது 91. இவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்து இருந்தார். பிப்ரவரி 10ம் தேதி கங்கை நதியில் கோல்கட்டாவில் இருந்து பாட்னாவுக்கு ஒரு கப்பல் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டது.
அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது மறைவு குறித்து ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு இந்திய கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை, மேலும் அவருக்கு இந்தியாவின் மீது மிகுந்த அன்பு இருந்தது. அவரது கடைசி ஆசை இந்தியாவில் நிறைவேறியது.
சாம்ஸின் மனைவி அலெஸ், அவரது கல்லறையில் இறுதி மரியாதை செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது தனது தந்தை அசாமில் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இருந்தார் என்பதை அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தனது கணவர் விருப்பப்படி, மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனது கணவருக்கு இந்தியா மற்றும் அசாம் மீது மிகுந்த அன்பு உண்டு. அவர் பல முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்திருந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கிறிஸ்தவ மதத்தின்படி பாதிரியாரால் செய்யப்பட்டன," என்று அலெஸ் தெரிவித்தார்.


மேலும்
-
நகல் என்றுமே அசல் ஆக முடியாது; முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்
-
கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தோட்டத்தில் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை!
-
எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்; ரஜினி நெகிழ்ச்சி பேட்டி
-
பள்ளிச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 12ம் வகுப்பு மாணவனின் வக்கிர செயல்
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்!