சைலன்சரில் இருந்து தீயை கக்கிய சொகுசு கார் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு சர்ச் தெருவில் ஏராளமான 'பப்' புகள் உள்ளன. இதனால் அந்த தெரு, வார இறுதி நாட்களில் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சர்ச் தெருவுக்குள் சொகுசு கார் நுழைந்தது.

அந்த காரின் சைலன்சரில் இருந்து புகைக்கு பதிலாக தீ கக்கியது. இதை பார்த்து, அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்; அந்த கார் அங்கிருந்து சென்றது.

சைலன்சரில் இருந்து தீ கக்கியதை, மொபைல் போனில் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ கப்பன் பார்க் போக்குவரத்து போலீசாருக்கும் கிடைத்தது.

காரின் உரிமையாளர் யார் என்று விசாரித்த போது, கே.ஆர்.புரத்தின் தொழில் அதிபர் பஞ்சு ஷெனாய் என்பது தெரிந்தது. நேற்று காரை, போலீசார் பறிமுதல் செய்தனர். சைலன்சரில் இருந்து புகைக்கு பதிலாக தீயை கக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

Advertisement