3வது மொழி படிப்பதை அ.தி.மு.க., தடுக்காது

1

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அவருடைய சொந்த ஊரான தேனியிலேயே செல்வாக்கு கிடையாது. அதற்காகவே, அ.தி.மு.க., சார்பில் தேனியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.

பழனிசாமி தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். கூட்டணி தொடர்பாக என்ன வியூகம் உள்ளது என்பது குறித்து, அவருக்கு மட்டுமே தெரியும். கட்சியின் மற்ற தலைவர்களுக்கு தெரிந்தாலும், அதை வெளியில் சொல்லக் கூடாது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றாலும், பழனிசாமியே முடிவெடுப்பார்.

இருமொழி கொள்கையைத் தான் அ.தி.மு.க., ஆதரிக்கும். அதற்காக, மூன்றாவது மொழி படிப்பதை தடுக்க மாட்டோம்.

மூன்றாவது மொழியை ஏற்கவில்லை என்பதற்காக, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்துவது தவறு. முதல்வர் ஸ்டாலினின் தந்தையை அப்பா என்றனர். இப்போது ஸ்டாலினை அப்பா என்கின்றனர். குழப்பமாக உள்ளது.

- சீனிவாசன், முன்னாள் அமைச்சர்.

Advertisement