ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்

3


பெர்லின்: ஜெர்மனி அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்க உள்ளார். ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டார்.


ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. கடந்தாண்டு நவம்பரில், கூட்டணி கட்சியை சேர்ந்தவரான நிதியமைச்சரை அதிபர் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.



ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி., சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் அதிபர் பதவிக்கு மோதினர்.


நேற்று தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்தல் முன்னணி நிலவரம் அடிப்படையில், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டார்.


அவர் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் மெர்ஸை வாழ்த்துகிறேன். இது சமூக ஜனநாயக கட்சிக்கு ஒரு கசப்பான தேர்தல் முடிவு. தேர்தல் முடிவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement