கரூர் மாணவிக்கு கழுத்தறுப்பு; வாலிபர் கைது: போலீஸ் கூறுவது இதுதான்!

கரூர்: கரூரில் 10ம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 12ம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும், கழுத்தை அறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் தற்போது விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 17 வயது மாணவன், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறியுள்ளான். அங்கு வந்த மாணவியை கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி விட்டு, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிச் சென்று விட்டான்.
மாணவனைப் பற்றி அந்த மாணவி இழிவாக பேசியதன் காரணமாக, கோபத்தில் இந்த செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மாணவன் கைது செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளான்.
இப்படியிருக்கையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் குத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட கூடாது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.










மேலும்
-
வங்கதேச விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்!
-
மூளை இல்லாதவர்கள்... பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை திட்டி தீர்த்த அக்தர்
-
மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா; 18 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
-
பத்ம ஸ்ரீ புரிசை கண்ணப்ப சம்பந்தன்
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: கோவைக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்!