எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்; ரஜினி நெகிழ்ச்சி பேட்டி

6


சென்னை: 'ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும்' என ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.



Tamil News
Tamil News
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி:



ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை. 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். 2ம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன்.

சுவையான நினைவு




3ம் முறை மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை. அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். அவர் நாமம் வாழ்க. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Advertisement