தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் செங்கை புத்தக திருவிழா

செங்கை புத்தக திருவிழாவில், கடந்த ஆண்டு 60 அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்தாண்டு 80 அரங்குகள் அமைத்து, சென்னை அடுத்து, செங்கல்பட்டில் பெரிய விழாவாக நடத்தி வருகிறோம். அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதற்காக, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100 ரூபாய் வீதம் புத்தகம் வங்கிக்கொள்ளலாம்.
அனைவரும் பங்கேற்று, புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும். புத்தக திருவிழாவில்,வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, பறவைகள் வருகிறது.
இதில், பெலிகன் பறவை அதிகமாக வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பெலிகன் பறவை வடிவில், லோக மேடையில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர், பேசினார்.
புத்தக கண்காட்சி மாணவர்களுக்கு அறிவை வளர்த்துக்கொள்ளவும்,புத்தகங்கள் வாங்க பழகிக் கொள்ளவும், வாசிக்கும் திறனை உருவாக்கிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாகம்.
மாணவர்கள் புத்தக கண்காட்சியை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் வழிகள்; முன்கூட்டியே திட்டமிடுதல், புத்தக கண்காட்சிக்குச் செல்வதற்குமுன், எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள், தலைப்புகள் அல்லது பாடங்கள் பற்றி ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்.
கண்காட்சி நடைபெறும் அரங்கில் வரைபடத்டதை பார்த்து திட்டுமிட்டு செல்லுங்கள். அனைத்து அரங்குகளையும் பார்வையிடுங்கள். வெவ்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
புதிய எழுத்தாளர்கள் மற்றும் தலைப்புகளைக் கண்டறியுங்கள். எழுத்தாளர்கள் கலந்துரையாடும் நிகழ்வுகள் இருக்கும்.
அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்களுக்கு தேனையான புத்தகங்களை வாங்குங்கள். உங்களுடைய உண்டியல் சேமிப்புகளை இதற்காக பயன்படுத்தலாம். புத்தகக் கண்காட்சிக்குச் சென்று, புத்தகங்களை வாங்குவதன் மூலம், வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசியுங்கள். புத்தகங்களை வாசிப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடுதல். புத்தக கண்காட்சிக்கு நண்பர்களுடன் சென்று, புத்தகங்களைப்பற்றி கலந்துரையாடுங்கள்.
ஒருவருக்கு ஒருவர் புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள். புத்தக கண்காட்சி மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டு நகரில், மாபெரும் புத்தக திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். புத்தகங்கள் அறிவின் கருவூலம்.
அவை நம்மை மேம்படுத்தவும், உலகை புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இந்த திருவிழாவில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வழங்குகிறது.
அரிய மற்றும் புதிய புத்தகங்கள் கிடைக்கும். பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள், குழந்தைகளுக்கான சிறப்பு புத்தகங்கள், தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, புத்தகங்கள் வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
நகரத்தை துாய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் முயற்சியில், மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விழிப்புணர்வுவை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே மஞ்சப்பையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மஞ்சப்பை செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சப்பையுடன் செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மஞ்சப்பை விழிப்புணர்வின் முக்கிய அம்சங்கள்:
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விலைவிக்கின்றன. மஞ்சப்பையை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு. மஞ்சப்பை மட்கும் தன்மையுடையது. இதனால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாரம்பரியத்தை காத்தல். மஞ்சப்பை நம் பாரம்பரியத்தின் ஒரு அங்கம்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் பாரம்பரியத்தை காக்கலாம். மாணவர்களின் இந்த முயற்சி மற்றவர்களுக்கும், ஒரு முன்மாதிரியாக உள்ளது. அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்தி, நம் நகரத்தை துாய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவோம்.
நீண்டநாள் உழைக்கும் தன்மை கொண்டது. பொருட்களை எளிதில் எடுத்துச்செல்லலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மஞ்சப்பையை பயன்படுத்துவோம். மாசு இல்லாத நகரத்தை உருவாக்குவோம்.
மேலும்
-
தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை; இ.பி.எஸ்.,
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
-
நகல் என்றுமே அசல் ஆக முடியாது; முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்
-
கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தோட்டத்தில் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை!
-
எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்; ரஜினி நெகிழ்ச்சி பேட்டி