காட்டு யானை மிதித்து கேரளாவில் 2 பேர் பலி
கண்ணூர்: கேரளாவில் காட்டு யானை மிதித்ததில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
கேரளாவில் வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில், யானை, கரடி போன்ற வன விலங்குகள் தாக்குவதால், பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
வயநாட்டில் சில தினங்களுக்கு முன், காட்டு யானைகள் பிரச்னைக்காக கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இந்நிலையில் கண்ணுார் மாவட்டத்தின் ஆராளம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நேற்று உயிரிழந்தனர். ஆராளம் பகுதியில் வசித்த பழங்குடி இனத்தைச் சேரந்த வெள்ளி, லீலா ஆகியோர், முந்திரி விதை சேகரிப்பதற்காக, தோட்டப் பகுதிக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, அவர்களை தாக்கி, மிதித்துக் கொன்றது. வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்
-
அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
-
இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை; வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்
-
மஹா சிவராத்திரிக்கு 440 சிறப்பு பேருந்துகள்
-
தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை; இ.பி.எஸ்.,
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
-
நகல் என்றுமே அசல் ஆக முடியாது; முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்