இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை; வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்

6


போபால்: 'இந்திய வரலாற்றில் முதல் முறையாக, முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது' என பிரதமர் மோடி பேசினார்.


மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 2025 உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் வரவேற்றார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் முன்னணி மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

பொருளாதாரம்



வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் தொடரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வணிக இடம்



பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இன்று இங்கு வந்துள்ளனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது.
செழிப்பான தொழில்களுடன், மத்தியப் பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சிற்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மன்னிப்பு கேட்டார் பிரதமர்!




பிரதமர் மோடி வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி தாமதாமாக ஆரம்பித்தது. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், 'மாநாடு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்ததால் தாமதமாக கிளம்பி வந்தேன். பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகளை மூடப்பட்டால், குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு செல்ல தாமதம் ஏற்பட்டது. குழந்தைகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடையவே தாமதமாக புறப்பட்டேன்' என குறிப்பிட்டார்.

Advertisement