திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாதை பணிக்காக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரயில் பெட்டிகளை மாற்று இஞ்சின் மூலமாக காரைக்காலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அகத்திய மலை பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வரக் கூடிய ரயில் பாதை இந்த விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
24 பிப்,2025 - 11:07 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
-
இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை; வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்
-
மஹா சிவராத்திரிக்கு 440 சிறப்பு பேருந்துகள்
-
தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை; இ.பி.எஸ்.,
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
-
நகல் என்றுமே அசல் ஆக முடியாது; முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்
Advertisement
Advertisement