வங்கதேச விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்!

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; சிலர் காயமடைந்தனர்
வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் விமான படையின் தளம் உள்ளது. அங்கு பணியாற்றும் விமானப்படை வீரர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் சில காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று உள்ளூர் மக்கள் கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மோதல் முற்றிய நிலையில், ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த தாக்குதலில் 30 வயதான ஷிஹாப் கபீர் என்பவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காக்ஸ் பஜார் துணை கமிஷனர் முகமது சலாவுதீன், தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். விமானப்படை தளத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
'விமானப்படை தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என விமானப்படை தளம் தெரிவித்துள்ளது.




மேலும்
-
தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
-
கடத்தல் அதிகரிப்பு: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
-
பண்ருட்டி அருகே ஊராட்சி செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
-
தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்
-
நவகிரக கோவில்கள் சிறப்பு பஸ் பயண திட்டம்; ஒராண்டில் 22 ஆயிரம் பேர் பயணம்
-
பட்டாசு குடோன் வெடிவிபத்து: தர்மபுரி அருகே 3 பெண்கள் பலி