நவகிரக கோவில்கள் சிறப்பு பஸ் பயண திட்டம்; ஒராண்டில் 22 ஆயிரம் பேர் பயணம்

தஞ்சாவூர்; நவகிரக கோவில்கள் சிறப்பு பஸ் பயண திட்டத்தில் ஓராண்டில் மட்டும் 22 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2024ம் ஆண்டு பிப். 24ம் தேதி, நவகிரக கோவில் சிறப்பு பஸ் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்த பஸ் கும்பகோணத்தில் புறப்பட்டு, ஒரே நாளில் நவகிரக கோவில்களுக்கு சென்று, பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது.
இதில், வாரம்தோறும் சாதாரண ரக பஸ்சில் ஒரு நபருக்கு 750 ரூபாயும், வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ஒரு குளிர்சாதன பஸ்சில் ஒரு நபருக்கு 1,350 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் ஆண்டு துவக்கமான இன்று (பிப்.24) நவகிரக கோவிலுக்கு செல்லும் பயணிகளுக்கு மேள, தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, பூங்கொத்து, இனிப்புகள், நவக்கிரக கோவில்களின் படங்களை உள்ளடக்கிய சாவிக்கொத்து, தண்ணீர் பாட்டில், தொப்பி, நவகிரகங்கள் குறித்து குறிப்புகளை, கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வழங்கி வரவேற்றார்.
இது குறித்து கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி கூறியதாவது:
நவகிரக கோவில் சிறப்பு பஸ் அமைச்சரால் துவங்கப்பட்ட போது, வாரத்திற்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பிறகு மக்களின் கோரிக்கையை ஏற்று, சாதாரண ரக பஸ் வாரம்தோறும், ஏ.சி., பஸ் வாரம் மூன்று நாட்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஓராண்டில், இரண்டு பஸ்களிலும் 22,000 பயணிகள் பயணித்துள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் நவகிரக கோவில்களை எந்த சிரமமுமின்றி தரிசனம் செய்து வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், பொது மேலாளர் ஶ்ரீதரன், துணை மேலாளர் ராஜேஷ், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தர்மபுரி வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
-
திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
-
இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை: 12 பேர் கைது
-
வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க. கொடி!
-
உலகின் ஒவ்வொரு சமையலறையிலும் இந்திய விவசாயியின் பொருள் என்பதே எனது கனவு: பிரதமர் மோடி
-
தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு