வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க. கொடி!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் த.வெ.க., கொடியை பறக்கவிட்டது என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
@1brகோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் பலமணி நேரம் நடந்து சென்று கடவுளை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள 7வது மலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஒருவர் நீண்ட கம்பு ஒன்றில் ஏற்றி கட்டி வைத்து விட்டு சென்று இருக்கிறார்.
அடர்ந்த வனத்தில் ஓங்கி உயர்ந்த மலையில் த.வெ.க., கொடி பறக்கும் காட்சிகளை அங்குள்ளோர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். கொடியை கட்டியது யார் என்பது குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது:
போளுவாம்பட்டி வனச்சரகம், போளுவாம்ட்டி பிளாக் 2 காப்புக்காடு, வெள்ளபதி பிரிவு, பூண்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட 7வது மலையில் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டது. கொடியை கட்டியவர்கள் யார் என்று தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (1)
Mala - ,
24 பிப்,2025 - 19:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஒடிசாவில் நீதிபதிகள் தேர்வு ஒருவர் கூட 'பாஸ்' ஆகவில்லை
-
மும்மொழி கொள்கையை தி.மு.க., அரசு ஏற்க மறுத்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: ஜி.கே நாகராஜ் பேச்சு
-
நாளை திட்டமிட்டபடி போராட்டம்; ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
-
ஓடும் ரயிலில் திருடிய போலீஸ்காரர் கைது
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி: சுட்டுப்பிடித்த போலீசார்
-
அசாமில் தேயிலை தோட்ட தொழில் 200-ம் ஆண்டு விழா: மோடிக்கு ஜூமோயர் நடனத்துடன் வரவேற்பு
Advertisement
Advertisement