இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை: 12 பேர் கைது

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீட்டில் பஞ்சாப் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான்கான் நடத்தும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி,(பி.டி.ஐ.,) மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்தது. ராவல்பிண்டி மற்றும பஞ்சாப் மாகாணத்தின் பிற மாவட்டங்களில் கட்சியினர் மாநாடு மற்றும் பேரணிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாகாண போலீசார் இந்த அரசியல் நடவடிக்கையை கட்டுப்படுத்த, கட்சியின் முக்கிய தலைவர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மூத்த பி.டி.ஐ., கட்சி தலைவர் ஷௌகத் பாஸ்ரா கூறியதாவது:
மாநாடுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்காக பஞ்சாப் காவல்துறை 12 பி.டி.ஐ., நிர்வாகிகளை சுற்றி வளைத்தனர். போலீசார் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை நாசப்படுத்தியுள்ளனர். ஆட்சியாளர்கள், ராணுவத்தின் உத்தரவின் பேரில் அவ்வாறு செய்வதாகக் கூறி தங்கள் செயலை நியாயப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு ஷௌகத் பாஸ்ரா கூறினார்.
மேலும்
-
நாளை திட்டமிட்டபடி போராட்டம்; ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
-
ஓடும் ரயிலில் திருடிய போலீஸ்காரர் கைது
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி: சுட்டுப்பிடித்த போலீசார்
-
அசாமில் தேயிலை தோட்ட தொழில் 200-ம் ஆண்டு விழா: மோடிக்கு ஜூமோயர் நடனத்துடன் வரவேற்பு
-
சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்
-
இணையத்தில் ஒரு ஸ்டார் மதிப்பீடு; மோசமான விமர்சனத்தால் கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் உரிமையாளர்