நாளை நிறைவு பெறும் கும்பமேளா! வாகனங்களுக்கு தடை விதித்து புதிய கட்டுப்பாடு

1

பிரயாக்ராஜ்; மகாகும்ப மேளா நிகழ்வு நாளை நிறைவு பெற உள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.



திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா நிகழ்வு, நாளை (பிப்.26) நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.


நாளையுடன் விழா நிறைவு பெற இருப்பதால் பிரயாக்ராஜ் வருவோர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் நாளைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, கூட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக இன்று (பிப்.25) மாலை 4 மணி முதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள், மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அவசியங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.


அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகில் நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

Advertisement