இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

23

இஸ்லாமாபாத்: ''வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்,'' என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயர் ஷெபாஸ் ஷெரீப் அல்ல. இந்தியாவை முந்தி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றுவோம்.

நான் நவாஸ் கானின் ஆதரவாளர். பதவியேற்ற போது அவர் அளித்த ஆசி எனக்கு ஊக்கம் அளித்து வருகிறது. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றி இந்தியாவை தோற்கடிப்போம். இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதும், அவரையும், பாகிஸ்தானையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement