அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்

9

கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதால் பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை ஈஷா மையத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மாவட்ட பாஜ அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.

அவரை வரவேற்க, மாநகர் முழுவதும் போஸ்டர், பேனர்களை பா.ஜ.வினர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ., புதிய அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி குப்பையில் போட்டனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.,வினர், கோவை பீளமேடு போலீஸ் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கோவை- அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் முன்பு மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த
போலீசார் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Advertisement