பிட்காயின் முதலீட்டு மோசடி: 60 இடங்களில் சி.பி.ஐ., சோதனை

புதுடில்லி: பிட்காயின் மோசடி தொடர்பாக, டில்லி, புனே, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட 60 நகரங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று 2015ம் ஆண்டு மறைந்த அமித் பரத்வாஜ் மற்றும் அஜய் பரத்வாஜ் ஆகியோர் சேர்ந்து மோசடி நோக்கத்துடன் திட்டம் ஒன்றை அறிவித்தனர்.
பல நுாறு கோடி ரூபாய் வசூலித்த நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு பணம் எதையும் தராமல் ஏமாற்றி விட்டனர். இது தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ., இணைத்து விசாரிக்க உத்தரவிட்டது.


அதன்படி வழக்கை கையில் எடுத்துள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், மோசடியில் தொடர்புடையவர்களை குறிவைத்து டில்லி, புனே, சண்டிகர், நந்தீத், கோலாப்பூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 60 இடங்களில் சோதனை நடத்தினர்.

Advertisement