இந்தியா உடனான உறவு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: ஆஸி., பிரதமர் உறுதி

கான்பெர்ரா: '' உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்தியா உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தி வருகிறோம், '' என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா உடனான ஆஸ்திரேலியா உறவுானது வலிமையாகவும், ஆழமானதாகவும் மற்றும் முக்கியமானதாகவும் உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் வர உள்ளது. உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்தியா உடான பொருளாதார உறவை ஆஸ்திரேலியா ஊக்குவித்து வருகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அந்தோணி அல்பேன்ஸ் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா - இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நிதிக்கு ஆஸ்திரேலியா 139.40 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியானது, ஆஸ்திரேலியா தொழிலதிபர்கள், இந்தியாவின் சந்தையில் நுழைந்து புதிய வணிக வாய்ப்புகளை திறக்க உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
மேலும், இதற்காக, சுத்தமான எரிசக்தி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, விவசாய தொழில் மற்றும் சுற்றச்சூழல் ஆகிய துறைகளை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்த துறைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன், ஆஸ்திரேலியர்களுக்கு புதிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்யும் எனவும் கூறியுள்ளது.

மேலும்
-
ஆப்கானிஸ்தான் 'திரில்' வெற்றி: வெளியேறியது இங்கிலாந்து
-
10 ஆண்டுகளில் வழக்கு நடத்த அரசுக்கு ரூ.400 கோடி செலவு
-
ரேடார் நிறுவி இந்தியாவை கண்காணிக்கும் சீனா; தொடரும் அச்சுறுத்தல்
-
புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பெண் பலாத்காரம்: தலைமறைவான குற்றவாளியை தேடும் போலீஸ்
-
தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்
-
10 ஆண்டுகளில் வழக்குகளுக்கு மட்டும் ரூ.400 கோடி மத்திய அரசு செலவழிப்பு