புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பெண் பலாத்காரம்: தலைமறைவான குற்றவாளியை தேடும் போலீஸ்

2


புனே: புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புனேயின் சுவார்கேட் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 5:45 மணிக்கு பாதிக்கப்பட்ட பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, வந்த மர்ம நபர் ஒருவர் சகோதரி என அழைத்து பஸ் மறு புறம் நிற்பதாக கூறினார். இதனை நம்பி அந்தப் பெண் அங்கு சென்றார்.

போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் பஸ் நின்றது. அதில் ஏற அந்தப் பெண் தயங்கிய போது, அந்த நபர் தான் உதவி செய்வதாக உள்ளே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து உள்ள துணை முதல்வர் அஜித் பவார், குற்றவாளியை தூக்கில்போடவேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement