விண்வெளிக்கு செல்கிறார் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி!

2


புதுடில்லி: பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி ப்ளூ ஆரிஜினின் வரவிருக்கும் என்.எஸ்.31 திட்டத்தில் இணைந்து சாதனை படைக்க உள்ளார். இந்த திட்டத்தில் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில், 2 பத்திரிகையாளர்களுடன் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி விண்வெளிக்கு செல்கிறார்.

2025ம் ஆண்டின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. 1963ம் ஆண்டு வாலண்டினா தெரஷ்கோவுக்குப் பிறகு முதல் பெண் விண்வெளி வீரர் குழு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இது குறித்து அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள பிரபல பாடகி பெர்ரி கூறியதாவது:

எனது விண்வெளி பயணம், என் மகளையும் மற்றவர்களையும் குறிப்பிட்ட இலக்கை அடைய ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பணிக்கு முன்னாள் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் தலைமை தாங்குவார். அவர் இந்த பெண் விண்வெளி வீரர்கள் குழுவை உருவாக்க முக்கிய பங்கு வகித்தார்.

யார் இந்த பாடகி கேட்டி பெர்ரி!




* பாடகி கேட்டி பெர்ரி கலிபோர்னியாவில் அக்டோபர் 25ம் தேதி 1984ம் ஆண்டு பிறந்தார்.


* 2007ம் ஆண்டில் பெர்ரி பாடிய “யு ஆர் சோ கே” வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.



* 2008ம் ஆண்டில் இவர் “ஐ கிஸ்டு எ கேர்ள்” என்ற பாடலை பாடி, பிரபல பாடகியாக முன்னேற்றம் பெற்றார்.


* தற்போது, கேட்டி பெர்ரியின் பாடலை கேட்க ரசிகர்கள் வட்டாரங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement